இறைவனின் திருப்பெயரால்....

Tuesday, January 31, 2012

அதிராம்பட்டினம் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. புதிய அதிகாரபூர்வ நிர்வாகிகள் :

அதிராம்பட்டினம் த.மு.மு.க. மற்றும் ம.ம.க. புதிய அதிகாரபூர்வ நிர்வாகிகள் :

ம.ம.க. நகர, த.மு.மு.க. தலைவர் : A. சாதிக் பாட்ஷா - 9942033233
ம.ம.க. நகர த.மு.மு.க. செயலாளர் : M. முஹம்மது தைய்யூப் - 9952131334
ம.ம.க. நகர த.மு.மு.க. பொருளாளர் : M.O. செய்யது முஹம்மது புஹாரி - 9944449848
ம.ம.க. செயலாளர் : M. சாகுல் ஹமீது - 9894973416
த.மு.மு.க. துணை தலைவர் : H. செய்யது புஹாரி - 9944997021
த.மு.மு.க. துணை செயலாளர் : M. தமீம் அன்சாரி - 8675196695
ம.ம.க. துணை செயலாளர் : S. அஹமது ஹாஜா - 9003127748
மருத்துவ அணி செயலாளர் : J. உமர் முக்தார் - 9500516179

Monday, January 23, 2012

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.




விண்ணப்பம் எப்போது?

ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.

சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை அந்தந்த மாநில ஹஜ் கமிட்டி மூலமாகவும், அந்தந்த ஹஜ் கமிட்டி தலைவர்கள் மூலமாகவும் அறிவிப்புச் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.

தமிழக கோட்டா அதிகரிப்பு

தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் மிச்சமாகியது.

சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.

நடவடிக்கை உறுதி

இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் இப்பொழுதே செய்துக்கொள்ளுங்கள். சென்ற வருடம் போனவர்கள் இனி ஐந்து வருடம் கழித்துத்தான் போக முடியும் வருடா வருடம் சென்றவர்கள் இனி செல்ல முடியாது.

அபூபக்கர்- அமேஜான் (மு.செ.மு)   

சத்தான விருத்தி தரும் செவ்வாழை


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.





மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.



பல்வலி குணமடையும்



பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.



சொரி சிறங்கு நீங்கும்



சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.



நரம்பு தளர்ச்சி குணமடையும்



நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்



திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.



தொற்றுநோய் தடுக்கப்படும்



தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.



நன்றி : தட்ஸ் தமிழ்.





Monday, November 28, 2011

கீழத்தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமுமுக நிதியுதவி

கடந்த 10/11/2011 அன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.! வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! என்பதை நீங்கள் அறிந்தீர்பீர்கள். இதியோட்டி தீ விபத்தில் சேதம் அடைந்த குடும்பங்களுக்கு தமுமுக சார்பில் ரூ 42,342/- நிதி திரட்டப்பட்டு நேற்று (27/11/2011) உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மாற்றும் பல்வேறு அமைப்புகள் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக.!








Saturday, November 26, 2011

டிசம்பர் 6, 2011 போராட்டம் சிறப்புரையாற்றுவோர் விபரம்

Thursday, November 17, 2011

ஆம்புலன்ஸ் சேவை குறைபாடு: குற்றச்சாட்டுக்கு தமுமுக விளக்கம்!

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ லெ.மு.செ. அபூபக்கர் அவர்கள் த.மு.மு.க மற்றும் பைத்துல்மால் அவசர ஊர்திசேவையில் உள்ள குறைகளைப் பற்றி கூறியதற்கு த.மு.மு.க வின் பதிலாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறோம்.

த.மு.மு.க.வின் அவசர ஊர்திகென்று தனி கைபேசி எண் 97 50 50 50 94 இது த.மு.மு.க.வின் பொறுப்பாளர் நசுருதீன் என்பவரிடம் உள்ளது. சம்பவம் நடந்த நள்ளிரவு 2.10 க்கு பின் 2.15 முதல் 2.25 வரை நசுருதீனின் சொந்த கைபேசி எண்ணான வேற எண்ணுக்கு 19ஆவது வார்டு கவுன்சிலரின் கணவர் சகோ அகமது ஹாஜா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் 15 நிமிடம் வரை அந்த அழைப்பை நசுருதீன் அவர்கள் எடுக்கவில்லை. காரணம் அவர் முதல் நாள் இஷா தொழுகைக்கு போகும்போது அவரின் கைபேசியை அமைதி நிலையில் (Silent Mode) வைத்தவர் மீண்டும் அதை செயல் நிலைக்கு கொண்டு வர மறந்து விட்டார். "அவசர ஊர்தி தொடர்பு எண் தன் கைப்பேசியில் பதிவில் இல்லை. எனவே தனக்கு அந்த எண் நினைவில் இல்லை" என்று சகோ அஹ்மத் ஹாஜா அவர்கள் கூறுகிறார். அந்நிலையில் லெ.மு.செ.அபூபக்கரின் சகோதரர் சிராஜுதீன் அவரின் கைபேசியில் இருந்து 2.29 க்கு அவசர ஊர்தி எண்ணான 97 50 50 50 94 எண்ணுக்கு அழைப்பை விடுக்கிறார். இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு அது பதில் அளிக்கப்படவில்லை. உடனே அவர் த.மு.மு.க.வின் நகரச் செயலாளர் தையுப் அவர்களை தொடர்பு கொள்கிறார். அவர் சிராஜுதீனிடம் "ஓட்டுனர் வீடு சுரைக்கா கொல்லையில் உள்ளது. போய் உடனே எழுப்புங்கள்" என்று சொல்லியுள்ளார்.

சிராஜுதீன் அங்கு சென்று ஓட்டுனர் வீடு சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது நசுருதீன் இப்பொழுது அழைப்பிற்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது நேரம் 2.33. ஓட்டுனரின் வீட்டு முகவரியை தெளிவாகச் சொல்லியுள்ளார் அத்துடன் மூன்று நிமிடம் கழித்து ஓட்டுனருக்கும் பேசியுள்ளார். அப்பொழுது ஓட்டுனர் தானும் சிராஜுதீனும் அவசர
ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷிபா மருத்துவமனை நோக்கி செல்வதாக கூறியுள்ளார். அப்பொழுது நேரம் 2.36. இவை எல்லாம் கைபேசியில் பதிவாகி உள்ள நேரங்கள்.

சகோ அபூபக்கர் குறிப்பிடுவது போல் ஓட்டுனரின் கைப்பேசி அணைத்து வைக்கப்படவில்லை. அவசர எண் ஓட்டுனரிடம் இல்லை. அது பொறுப்பாளர் சகோ. நசுருதீன் வசம் உள்ளது நாம் அதை ஓட்டுனர்கள் வசம் கொடுத்து வைத்தால் ஒருவேளை அவர்கள் எடுக்க வில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது நிர்வாகிகளான எங்களின் கவனத்திற்கு வராமலே போகலாம். எனவேதான் பொறுப்பாளர் ஒருவரை நியமித்து தகவல் வந்த உடன் அதை அவர் மறுபுறம் உறுதி செய்து ஓட்டுனருக்கு தகவல் தருவார். ஓட்டுனரிடம் அவசர எண்ணான 97 50 50 50 94 இந்த எண்ணிலிருந்து வருவதற்காகவே தனி இலக்கம் வைத்துள்ளார். இந்த இலக்கத்தை வேறு எந்த சுய உபயோகத்திற்கு அவர் பயன் படுத்துவதில்லை.

சகோ அபூபக்கர் சொல்வது போல் இரவு பகல் என இரு ஓட்டுனர்களை வைத்து கொள்வதற்கு த.மு.மு.கவிடம் பொருளாதார வசதியும் இல்லை. குறைந்த சம்பளத்திற்கு சேவை மனப்பான்மை உள்ள ஓட்டுனர் கிடைப்பதில்லை. அதுபோல அவசர ஊர்தி தினமும் ஓடுவதற்கான வாடகை வாகனமும் அல்ல. நாங்கள் வசூலிக்கும் வாடகையில் இரு ஓட்டுநர்களை பணி அமர்த்துவது சாத்தியமும் இல்லை. தற்போதைய எங்களின் ஓட்டுனரை போல் நல்உள்ளம் கொண்டவரை பார்ப்பது கடினம்.

அரசாங்கம் செய்துவரும் 108 போல் இரவு முழுவதும் விழித்திருந்து சேவை செய்து பலபேர் வைத்து நிர்வாகம் நடத்துமளவுக்கு த.மு.மு.கவிடம் பொருளாதார சக்தி இல்லை. அன்று நடந்ததில் ஒரு தவறு நடந்துள்ளது. நள்ளிரவு 2.29 க்கு சகோ சிராஜுதீன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பொறுப்பாளரான நசுருத்தீன் இரண்டு முறை பதில் அளிக்காமல் உறக்கத்தில் இருந்திருக்கிறார். அவரும் மனிதன் தான். இறைவன் தனது வசனத்தில்... "இரவை உங்களுக்கு இளைப்பாறுவதற்கும் உறங்குவதற்கும் படைத்திருக்கிறேன்" என்று கூறுகிறான். நள்ளிரவு 2.30 மணிக்கெல்லாம் அழைப்பிற்கு சிலர் உடனே எழலாம். சிலர் சிறிது நேரம் கழித்து எழலாம். இது இறைவன் அவர்களுக்கு கொடுத்த சக்தியைப் பொறுத்தது.

இதில் சகோ அபூபக்கரின் வரிகளான // இவ்வாக்கம் யாரையும் தூக்கிப் பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை களைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது
5 நிமிட காலதாமதத்தை இவ்வளவு பெரிது படுத்தி எங்கள் தரப்பு விளக்கத்தை பெறாமல் அவர் ஊடகத்தின் வாயிலாக அதிவிரைவாக விமர்சித்திருப்பதை படைத்தவனே அறிவான்.

எங்களின் அவசர ஊர்தி சேவையை பற்றி சகோ அபூபக்கர் அறியாதவரல்ல. கடந்த 4/11/11 அன்று அவரது உறவினரின் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் எவ்வளவு நேரம் காத்திருந்து அவசர ஊர்தி சேவை செய்தது என்பது அவருக்கும் தெரியும்.

நல்ல விமர்சனம் எங்களை மேலும் நெறிப்படுத்தட்டும். உள்நோக்கம் இருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இப்படிக்கு
செயலாளர் த.மு.மு.க,
பொருளாளர் த.மு.மு.க,
துணைத் தலைவர் த.மு.மு.க ,
துணை செயலாளர் த.மு.மு.க
அதிரை நகரம்

Thursday, October 20, 2011

அதிரை ஆம்புலன்ஸ் அர்பணிப்பு- தமீம் அன்சாரி அவர்களின் உரையின் காணொளி



Saturday, October 15, 2011

முக்கிய அறிவிப்பு

அதிரை த மு மு க மற்றும் ம ம க கட்சியின் அதிகார பூர்வ அறிவிப்பு நமதூரில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டி இடும் அணைத்து வேட்பாளருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.பொது மக்கள் அனைவரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்
இப்படிக்கு
அதிரை நகர த மு மு க மற்றும் ம ம க

Monday, September 26, 2011

அதிரையில்தமுமுகஆம்புலன்ஸ்அற்பணிப்புசகோ.ஹாஜாகனிஉரையின்காணொளி

இந்த நிகழ்ச்சியின் காணொளியின் தொடர்ச்சி விரைவில்

Sunday, September 25, 2011

அதிரையில் ம ம க வேட்பாளர் அறிவிப்பு

அதிரையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூர்ராட்சி தலைவர் பதவிக்கு செய்யது முஹம்மது புஹாரி(ஆதம் டெக்ஸ்)அவர்களை மனிதநேய மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது